
பத்திக் குறி ஒட்டில் தொடக்கம் <P> இவ்வாறு இருக்கும். இது ஒரு புதிய பத்தி தொடங்குவதைக் குறிக்கிறது.</p> என்னும் முடிவுக் குறி ஒட்டு பத்தி முடிவதைக் குறிக்கிறது.இந்தக் குறி ஒட்டு எதற்கென்றால் ஒவ்வொரு பத்தியாக(Paragraph) பிரித்துக்காட்டப் பயன்படுகிறது. இதில் ஆரம்ப குறிஒட்டு ஒன்றை சேர்த்தால் கூட போதுமானது.
உதாரணத்தைக் கவனியுங்கள்..
<HTML>
<BODY>
<P>இந்த எளிய தமிழில் HTML தொடர் எளிமையாகவும், புதிய
வாசகர்களுக்கும், HTML கற்க விருப்பமுள்ளவர்களுக்கும்
பயனுள்ளதாக உள்ளது. </p><p>இந்த தளத்தைப் பற்றி உங்கள்
கருத்துகளையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். </P>
<P>தொடர்ந்து உங்களின் நல்லாதரவையும் ஒத்துழைப்பையும்
வழங்க கேட்டுக்கொள்கிறேன். <p> நன்றி. வணக்கம்.
<BODY>
</HTML>
இதன் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.
இந்த எளிய தமிழில் HTML தொடர் எளிமையாகவும், புதிய
வாசகர்களுக்கும், HTML கற்க விருப்பமுள்ளவர்களுக்கும்
பயனுள்ளதாக உள்ளது.இந்த தளத்தைப் பற்றி உங்கள்
கருத்துகளையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.தொடர்ந்து உங்களின் நல்லாதரவையும் ஒத்துழைப்பையும்
வழங்க கேட்டுக்கொள்கிறேன்.நன்றி. வணக்கம்.
எனவே ஒரு பத்திக்கும்(Paragraph) அடுத்த பத்திக்கும்(Paragraph)
இடைவெளி காண்பிக்க இந்த Pragraph Tag பயன்படுகிறது என்பதை
அறிந்துகொள்ளுங்கள். இதைச் செயல்படுத்தி பார்க்க நோட்பேடில்
மேற்கொண்ட நிரல்வரிகளை எழுதி Body Section -ல் ஒன்றிரண்டு பத்திகளை
எழுதி அவற்றிற்கிடையில் Pragraph Tag-ஐப் பயன்படுத்திப் பாருங்கள்.
அதன் விளைவை உலவியில் திறந்து பார்த்தால் தெரியும். Pragraph Tag
இடாத பத்திகள் அனைத்தும் இடைவெளியில்லாமலும் , Pragraph Tagஇட்ட
பத்திகள் இடைவெளிவிட்டு அமைந்திருப்பதையும் காணலாம்.
0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.