
ஆனால் Delete செய்த அனைத்து தகவல்களையும் மிக இலகுவாக Recover செய்து கொள்ள முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
Delete செய்த File-களை மிக இலகுவாக Professional Data Recovery Tool-களை பயன்படுத்தி Recover செய்து கொள்ள முடியும்.
உங்களிடம் இருந்து உங்கள் போனையோ அல்லது Pen Drive-ஐயோ வாங்கியவர் , உங்கள் தரவுகளை Recover செய்யும் பட்சத்தில் அதை தவறாக உபயோகிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறான பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் எவ்வாறு உங்கள் தனிப்பட்ட File-களை Recover செய்ய முடியாதபடி Delete செய்வது என்று காட்டுகிறேன்.
இதனால் உங்கள் தனிப்பட்ட File-கள் பாதுகாக்கபடுவதோடு நீங்கள் எதுவித பயமும் இன்றி உங்களுடைய போனையோ அல்லது Pen Drive-ஐயோ இன்னொருவருக்கு விற்பனை செய்ய முடியும்.
Recover செய்ய முடியாதவாறு ஒரு File-ஐ எவ்வாறு Delete செய்வது? உங்களுடைய கோப்புகளை எந்த விதமான Recovery Tool-ஐ பயன்படுத்தியும் Recover செய்ய முடியாத வண்ணம் Delete செய்ய File Shredder எனும் மென்பொருள் ஒன்று உதவுகிறது.
............................................
இங்கே கிளிக் செய்து
-----------------------------
File Shredder மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கிய மென்பொருளை உங்கள் கணனியில் Install செய்யுங்கள்.
இப்போது உங்கள் Memory Card, Pen Drive அல்லது Phone, எதிலிருந்து உங்கள் கோப்புக்களை Recover செய்ய முடியாதவாறு Delete செய்ய நினைக்கிறீர்களோ அந்த Device-ஐ உங்கள் கணணியும் Connect செய்யுங்கள்.
இப்போது நீங்கள் Delete செய்ய நினைக்கும் File-ஐ ரைட் கிளிக் செய்யுங்கள்.
கீழே காட்டபட்டிருப்பது போல் File Shredder எனும் ஒரு Option தோன்றும்.
அங்கே Secure Delete File எனும் Option-ஐ தெரிவு செய்து உங்கள் கோப்புக்களை Delete செய்யுங்கள்.
அவ்வளவு தான். இனி எந்தவிதமான File Recovery Tool-ஐ பயன்படுத்தியும் உங்களது Delete செய்யப்பட்ட கோப்புக்களை மீட்டெடுக்க முடியாது.
இவ்வாறு உங்கள் அனைத்து கோப்புக்களையும் Delete செய்த பின்னர், குறிப்பிட்ட Storage Device-ஐ Format செய்யுங்கள். சாதரணமான முறையில் Format செய்யாமல், கீழே குறிப்பிட்டிருப்பது போல், Quick Format எனும் Option-ஐ Un-tick செய்யுங்கள்.
பின்னர் Start எனும் Option-ஐ Click செய்து Format செய்யுங்கள்.
இவ்வாறு Format செய்வதால், உங்கள் External Storage Device-ல் தங்கி இருக்கும் அனைத்து System File-களும் முழுமையாக Delete செய்யப்படும்.
இப்போது எதுவித பயமும் இன்றி குறிப்பிட்ட Storage Device-ஐ இன்னொருவருக்கு கொடுக்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும்.
0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.