- தரவுத்தளம் என்பது ஒன்றுடன் ஓன்று தொடரபுடைய ஒழுங்குபடுத்தப்பட்ட தரவுகளின்கோர்வையாகும்.
- தரவுத்தளமானது நடமுறை உலகின் விடயங்களை பிரதிபலிக்ககூடியதாக இருப்பதனால் சிறியஉலகம் எனவும் அழைக்கப்படுகின்றது.
- DB ஆனது இயல்பான அர்த்தத்தைக கொடுக்கக் கூடிய ஒன்றுடனொன்று முரண்பாடு இல்லாததரவுகளின் சேர்க்கையாகும்.
- DB ஆனது ஒரு குறித்த நோக்கத்திற்காகவென்று வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதரவுகளைக் கொண்டு நிரப்பபப்பட்டிருக்கும். இதனைப் பயன்படுத்த பயனாளர்கள்விண்ணப்பங்களை(Applictions) தயார் நிலையில் வைத்திருப்பர்.
- ஒரு DB ஆனது வித்தியாசமான அளவு (Size) மற்றும் சிக்கலான கட்டமைப்புக்களில் அமைந்துகாணப்படலாம்.
தரவுத்தள வகைகள்.
1. பாரம்பரிய தரவுத்தளம் (Traditional Database)
இது வழமையான வங்கி நடவடிக்கைகளான பற்று மற்றும் வைப்புக்கள், ஹோட்டல் மற்றும்விமான பதிவுகள், கணனி மயப்படுத்தப்பட்ட நூலக முறைமைப்பதிவுகள், மற்றும் வணிக கொடுக்கல்வாங்கல் போன்றவற்றை பதிந்து வைப்பதற்கான தரவுத்தளங்கள்
2. பல்லூடக தரவுத்தளம் (Multimedia Database)
இதில் படங்கள், ஒலி, ஒளி தகவல்களை சேமிக்கப்படும்.
3. புவியியல் தகவல் முறைமை சார் தரவுத்தளம் (Geographical IS Database)
இதில் உலக வரைபடம், காலநிலை தொடர்பான தரவுகள் மற்றும் செய்மதிப்படங்களை சேகரித்துவைக்கவும் அவற்றை ஆய்வு செய்யவும் இத்தளங்கள் பயன்படுத்தப்டுகினறன.
4. Data warehouses and online analytical processing (OLAP)
இவ்தரவுத்தளங்கள் பெரிய தரவுத்தளங்களாகும் பெரும்பாலும் தீர்மானம் எடுத்தலுக்காகஅத்தரவுத்தளங்களை ஆய்வு செய்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதிகளை வழங்கக்கூடிய தரவுத்தளங்களாகும்.
5. நிகழ் நேர மற்றும் இயங்கு நிலை தரவுத்தளம் (Real time and active db)
இத்தரவுத்தளங்கள் கைத்தொழில் மற்றும் உற்பத்தி செயற்பாடுகளை கட்டுப்படுத்ததேவையான தரவுகளை வைத்திருக்கும்.
தரவுத்தள முகாமை முறைமை - Database Management System (DBMS)
இது DB க்களை உருவாக்குவதற்கும் அவற்றை பராமரிப்பதற்கும் உள்ளநிரலிகளின்(Programs)சேர்வையாகும்.
அதாவது DBMS என்பது பொதுவான பயன்பாட்டிற்காகவென்று மென்பொருள் இது DBயினைவரையறுத்தல் (Define), நிர்மானித்தல்(Construct), கணிப்பீடுகளை (Manipulation) மேற்கொள்ளல் மற்றும்பல்வேறுபட்ட பாவனையாளர்கள் விண்ணப்பங்களிடையே (Applications) DB இனை பங்கிடுதல்போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக உதவியாக இருக்கும்.
வரையறுத்தல்(Define)
இது என்ன வகையான தரவு வகைகள்(Data Type), கட்டமைப்பு, தரவுத்தளத்தில் தரவினை சேமிப்பதில்உள்ள தடைகள் போன்றவற்றை வரையறை செய்யும்.
நிர்மாணித்தல்(Construct)
DB ஆனது சேமிப்பகத்தில் சேமித்து வைப்பதற்காக என்ன வகையான செயற்பாடுகள்மேற்கொள்ளப்படும் என்பதனை குறிக்கும்.
கணிப்பீடுகள்(Manipulation)
இது DB இல் இருந்து ஒரு குறிப்பிட்ட தரவுகளை பெற்றுக் கொள்ளல், வெளியுலக மாற்றங்களைபிரதிபலிக்கத்தகதாக DB ஐ பதிவேற்றம் செய்தல்(Update) மற்றும் DBஇல் இருந்து தேவையானஅறிக்கைகளை பெற்றுக் கொள்ளல் போன்ற விடயங்களை இது குறிக்கும்.
தரவுத்தள முகாமை முறைமையின் வகைகள்
1. மட்டக் கோவை மாதிரி (Flat file System)
இங்கு தரவுத்தளமானது தனித்தனி அட்டவணையில் காணப்படும். இவ்வாறு இங்கு ஒவ்வொருஅட்டவணையும் ஒவ்வொரு தரவுத்தளமாக கையாளப்படும்.
நன்மை
- மலிவாக கிடைக்கும்.
- மிகவும் பாதுகாப்பானது.
தீமை
- குறைவான வேகத்துடன் செயற்படும்.
- கூடுதலான நினைவக களஞ்சிய தேவை.
- மட்டக் கோவை மாதிரியின் குறைபாடுகள்
v பிரிவினை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட தரவுகள்
ஒவ்வொரு கோவையும் தமக்கென சொந்தமான தரவுகளை வைத்திருப்பதனால் ஒருபாவனையாளருக்கு இன்னுமொரு கோப்பில் உள்ள பயன் மிக்க தகவல்கள் தெரியாமல் போகலாம்.
v பிரதிபண்ணப்பட்ட தரவுகள் (Duplication Of Data)
அத்தியவசியமான கோப்புக்களில் ஒரே விதமான தரவுகள் வைக்கப்பட்டிருப்பதனால் நினைவககளஞ்சியம் வீண் விரயமாகும்.
v தரவுகள் தயவில் வைத்திருத்தல் (Data Dependency )
கோப்புக் கட்டமைப்பானது program code னுள் வரையருக்கப்பட்டிருக்கும்
v பொருத்தமற்ற கோப்பு மாதிரி (Incompatible file formats)
ஓவ்வொரு கோப்பும் வித்தியாசமான மொழிகளை பயன்படுத்தி எழுதப்பட்டிருந்தால் ஒவ்வொருகோப்பையும் இலகுவாக அடைந்து கொள்ள முடியும்.
v நிலையான வேண்டுகோள் (fixed queries)
Program களானது குறிப்பிட்ட சில தேவைகளுக்காகவே எழுதப்பட்டிருக்கும்.புதிய தேவைகளுக்காகமீண்டும் Program எழுத வேண்டி ஏற்படும்.
2. உறவு முறை மாதிரி (Relational Model)
இது ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட அட்டவணைகளின் தொகுப்பாக காணப்படுகின்றது. அட்டவணை(Table) - இது தொடரான நிரல் நிரைகளின் ஒரு வெட்டுகமாக கொள்ளப்படுகின்றது. இந்தஅட்டவணைகள் ஒரு பொதுவான ஒரு நிலைத்திருக்கும் பொருளினால் (entity)இணைக்கப்பட்டிருக்கும்.
அட்டவணைகளின் அடிப்படை தரவு கட்டமைப்பு பின்வரும் பண்புகளை கொண்டிருக்கும்.
- நிரைகளின்(row) ஒழுங்கானது முக்கியமான ஒன்டறல்ல.
- ஒரு அட்டவணையில் ஒரே பெறுமதியான நிரைகள்(column) அனுமதிக்கப்படமாட்டாது.
- ஓவ்வொரு நிரையும் ஒவ்வொரு நிரல் சாவிக்களான (Column Key) ஒற்றைப் பெறுமதியை(Atomic Value) கொண்டிருக்கும்.
3. படி நிலை மாதிரி – Hierarchical Model
இதில் தரவுகளானது மர வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது இதில் பெற்றோர் பிள்ளைஅமைப்பில் தரவுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் ஒரு குறித்த தரவினை மீண்டும் மீண்டும்பயன்படுத்தக்கூடிய வசதி உள்ளது.
•ஒரு பெற்றோர் எத்தனை பிள்ளைகளையும் கொண்டிருக்க முடியும்.
• ஓவ்வொரு பிள்ளையும் குறித்த ஒரு பெற்றோருக்கே சொந்தமாக இருக்க முடியும்.
நன்மை
- வினைத்திறன்
- தரவுத்தள பாதுகாப்பு மற்றும்
- தரவு சுதந்திரம்
- எண்ணக்கரு எளிமை conceptual simplicity
தீமை
- சிக்கலான முறைமை
- முகாமை செய்வது கடினம் மற்றும் தர மட்டத்தில் குறைபாடு
- வடிவமைப்பு சுதந்ததிரத்தில் காணப்படும் குறைபாடு
- விண்ணப்ப உருவாக்கம் ஆனது சிக்கலான முறைமையை கொண்டிருத்தல்
- அமுலாக்கத்தில் காணப்படும் தடைகள் கட்டுப்பாடுகள்
4. பொருள் உறவு முறை மாதிரி (Object Oriented Model)
இது object orientation உடனான சிக்கலான தரவு வகையாறாக்களுடன் கூடிய தரவுத்தளங்களைவழங்குகின்றது. இதன் போது தரவுத்தள முகாமைத்துவத்திற்கு python, java, VB போன்ற OOP மொழிபயன்படுத்தபடபடும். மேலும் இவை ஏனைய மாதிரிகளால் வெற்றி கொள்ள முடியாத கணனி சார்வரைதல்(CAD), புவியியல் தகவல் முறைமை (GIS), பல்லூடக தரவுத்தள மாதிரி (multimedia DB model) போன்றவற்றை வெற்றி கொள்ள இம் மாதிரி பயன்படுத்தப்படும்.
5. வலைப்பின்னல் மாதிரி (Network Data base model))
இதில் ஒவ்வொரு பதிவும் ஒன்றுக்கு மேற்பட்ட பெற்றோரை கொண்டிருக்க முடியும். இவை Sets களாகஉருவாக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு Set உம் உரிமையாளர் பதிவும் மற்றும் அங்கத்துவ பதிவைக்கொண்டிருக்கும். ஒரு அங்கத்துவப்பதிவானது பல உரிமையாளர்களை கொண்டிருக்கும்.
நன்மை
- conceptual simplicity
- அதிகமான உறவு முறை (Relation ship) வகைகளை கையாளும்.
- தரவினை அடைந்து கொள்வது இலகுவானது.
- தரவு சுதந்திரமானது.
தீமை.
- சிக்கலான முறைமை
- கட்டமைப்பு சுதந்திரம் குறைவு.
0 Blogger-facebook:
Post a Comment