April 15, 2025 09:15:41 AM Menu

கணனி என்பது ஒரு இலத்திரனியல் சாதனமாகும். இது தரவுகளை ஒரு செய்முறைக்கு உட்படுத்தி அதிலிருந்து பயனுள்ள தகவல்களைத் தருகின்ற சாதனமாகும். அத்துடன் Program களை கட்டுப்படுத்துகின்ற சேமிக்கின்ற செயற்பாடுகளைச் செய்யக்கூடிய சாதனமே கணனியாகும்

ஒரு கணனிக்கு உரித்தான இயல்புகளை பின்வருமாறு பட்டியற்படுத்தலாம்
1. வேகம் (Speed)
2. திருத்தம் (Accuracy)
3. நம்பகத்தன்மை (Reliability)
4. சேமித்தல் தகைமை (Storage Capability)
5. தொடுகையின்றிய நன்மைகள் (Intangible Benefits)
6. குறைந்த கட்டணம் (Reduced Cost)
7. இணையம் (Internet)

வேகம் (Speed)
கணினி ஆனது எண்கணித செயற்பாடுகள், ஆவணங்களை இடம் மாற்றல், பிரதி செய்தல் போன்ற செயற்பாடுகளை ஒரு நிமிடத்தில் மில்லியன் அல்லது பில்லியன் ஆணைகள் (Instructions)என்ற வேகத்தில் செயற்படும் தன்மை வாய்ந்தது.
திருத்தம் (Accuracy)
கணினிகள் மிகத் திருத்தமானவை. மில்லியன் எண்ணிக்கையான செயற்பாடுகளை மிகத் திருத்தத்துடன் செயற்படுத்தும். ஏனெனில் அதன் சுற்றுக்கள் தேய்வடையக்கூடிய அல்லது குறைந்து செயற்படக்கூடிய இயந்திரவியல் பகங்கள் அற்றது

நம்பகத்தன்மை (Reliability)
கணினியில் உட்செலுத்தும் (Input) தகவல்கள் மற்றும் Program Instruction (நிகழ்வு ஆணைகள்) நம்பகரமானதாகவும்நிரந்தரமானதாகவும் இருந்தல் அதன் தீர்வுகள் (Output) பொதுவாகச் சரியானதாகவும் இருக்கும்

சேமித்தல் தகைமை(Storage Capability)
கணினிகள் தகவல்களை சேமித்து வைத்திருக்கும் தன்மை கொண்டது. அதாவது கணினிகள் மில்லியன் எண்ணிக்கையான தகவல்களை ஒடுங்கிய வடிவத்தில் சேமிக்கக்கூடியவை.

தொடுகையின்றிய நன்மைகள் (Intangible Benefits)
பல தொழில் நிறுவனங்களில் கணனியானது உருவமற்ற நன்மைகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதுடன் நுகர்வோரின் உளவியல் காரணிகளைக் கவருதல் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றது.
குறைந்த கட்டணம் (Reduced Cost)
கணினிகளின் விலையானது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் அபிவிருத்தியால் குறைவடைந்து கொண்டு செல்கிறது. இதனால்முன்னைய ஆண்டுகளை விட குறைவான விலையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
02 Dec 2015

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×