வணக்கம் நண்பர்களே..! கடந்த இடுகையில் HTML என்பது என்ன? HTML ஆவணம் உருவாக்க என்ன தேவை? என்பதைப் பற்றிப் பார்த்தோம்.
இந்த இடுகையில் HTML ஆவணத்தின் அடிப்படைகளான, Tags (குறிஒட்டுகள்),
Element(உறுப்பு), Attributes (பண்புகள்)போன்றவற்றில் முதலில்
TAGS(குறிஒட்டுகள்) என்பதை ஒரு சிறிய விளக்கத்துடன் பார்ப்போம்.
குறிஒட்டுகள் என்பதற்கான விளக்கம் கடந்த இடுகைகளில் தெரிவித்திருந்தேன். இந்த குறிஒட்டுகள்(Tags) பலவகைப்படும். இந்த குறிஒட்டுகளைப் பற்றி சிறிய விளக்கத்துடன் பார்ப்போம்.
நாம் கணியில் ஒரு எழுத்தை தட்டச்சிடும்போது என்ன எழுத்தை தட்டச்சிடுகிறோமோ அதே எழுத்தாகவே எடுத்துக்கொள்ளும். உதாரணமாக C என்னும் எழுத்தை தட்டச்சிடும்போது Cஆகவே எடுத்துக்கொள்ளும். இது கணினியின் பண்பு.
அந்த எழுத்து சிறியதாகவோ, பெரியதாகவோ, தடிமனாகவோ, அல்லது சாய்வெழுத்தாகவோ இருப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால் அந்த Com என்னும் எழுத்து மேற்குறிப்பிட்ட பண்புகளில் இருக்க வேண்டும் (அதாவது தடிமன், சாய்வு, பெரியது, சிறியது) என் நிர்ணயம் செய்வது இந்த HTML ல் அடங்கியுள்ள குறிஒட்டுகள்.

Com என்னும் எழுத்து தடிமனாக இருக்கவேண்டும் என உலவிக்கு தெரிவிப்பதற்கு C க்கு முன்னும் பின்னும் இவ்வாறு குறிஒட்டுகள் (Tags) சேர்க்க வேண்டும்.
.............................................................
<B>Com</B>
............................................................
இந்த குறிஒட்டிற்குப் பெயர்தான் டேக்(Tag).

HTML-ல் குறிப்பிடப்படும் குறிஒட்டுகள்(TAGS), எல்லா பிரௌசர்களிலும் ஒரே பொருளிலேயே குறிக்கப்படும்.

அதாவது வலைஉலவிகள் Firefox opera, Google chrome போன்ற அனைத்து வெவ்வேறான உலவிகளும் HTML குறியீடுகளை ஒரே பொருளிலேயே எடுத்துக்கொள்கிறது.

HTML ஆவணத்தை உலவியின் மூலமாக திறந்து பார்க்கும்போது நாம் எழுதிய குறிஒட்டுகள்(TAGS) உலவியில் தெரிவதில்லை. ஆனால் அதன் விளைவுகள் தெரியும்.
கீழே உள்ள அட்டவணை படத்தைப் பாருங்கள்.

HTML ஆவணமும், அதனுடைய வெளிப்பாடு வலைஉலவியில் எப்படித் தெரிகிறது என்பதையும் காட்டியிருக்கிறேன்.

HTML ஆவணம்
உலவியில் அதன் வெளிப்பாடு
இது ஒரு <b>அட்டவணை</b> ஆகும்.
இது ஒரு அட்டவணை ஆகும்.


இந்த அட்டவணையில் <b>அட்டவணை</b> என்ற HTML உறுப்பானது வலையுலவியால் அட்டவணைஎன்ற தடிமனான வார்த்தையாக மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

 
Top
Don't Forget To Join US Our Community
×