April 14, 2025 11:16:29 AM Menu


இணையம்(Internet) என்பது இன்று உலகில் எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இணையத்தில் உலாவ சிறிது ஆங்கில அறிவும், அடிப்படைக் கணினி அறிவும் இருந்தாலே போதும். யார் வேண்டுமானாலும் சுலபமாக இணையத்தைப் பயன்படுத்தலாம் என்கிற நிலை. . அதுவும் இப்போது தமிழிலேயே ஏறக்குறைய அனைத்துச் செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம் என்பதால் இன்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் இணையம் பரவி விரிந்து நிற்கிறது என்பதுதான் உண்மை.

இணையம் என்பது என்ன? இணையப் பக்கம்(Web Page) என்பது என்ன?
இதற்கான அடிப்படை என்ன? இது எப்படி உருவாக்கப்படுகிறது?
என்பதைப் பற்றிப் பார்ப்போம்
.

முதலில் இணையப் பக்கம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
இணையப் பக்கம் உருவாக்க அடிப்படையானது HTML. இதன் விரிவாக்கம் Hypertext Markup Language என்பது.

நாம் காணும் ஒவ்வொரு இணையப்பக்கமும் இந்த HTMLலைப் பயன்படுத்தித்தான் உருவாக்கப்படுகிறது. இணையப் பக்கம் உருவாக்க நிறையமொழிகள் இருப்பினும் இதுதான் அடிப்படை.

இன்னும் எளிமையாக சொல்வதென்றால் நீங்கள் பார்க்கும் இணையப்பக்கத்தினை ரைட் கிளிக் செய்து View Page Source அல்லது Page Source என்பதை கிளிக் செய்தால் ஒரு பக்கம் தோன்றும். அதில் உள்ளதுதான் இணையப்பக்கத்திற்கான அடிப்படையாம் HTML கட்டமைப்புடன் கூடிய நிரல்வரிகள்(Codings)
இணையப்பக்கத்திற்கான நிரல் வரிகள்


உண்மையில் நாம் பார்க்கும் இணையதளங்களின் பக்கங்கள் மற்றும் படங்கள் அனைத்தும் இத்தகைய கோடிங்களாலேயே எழுதப்பட்டுள்ளன.

பிறகு அதை நமக்கு விஷூவலாக(visual) (படங்களாக, எழுத்துக்களாக) மாற்றி அமைக்கப்பட்டு, கணினித்திரையில் இவ்வாறு இணையதளப் பக்கங்கள் காட்டப்படுகிறது.

மேலே இருக்கும் படத்தில் உள்ள நிரல் வரிகள்தான் நமக்கு கணினித்திரையில் இப்படி காட்சியளிக்கிறது..


வலைப் பக்கம் - (web page) அதாவது நம் தமிழ்மொழியில் இருப்பதைப் போன்று அ,ஆ,இ.ஈ. போன்ற அடிப்படை எழுத்துகளைப் போன்றதே..
நன்கு கற்றுக்கொண்ட பிறகு. .. பெரிய பெரிய நாவல்கள் வாசிக்கலாம்.. வாசித்த நாவல்களைப் போன்றே எழுதலாம்.. திறமையானவர்களாக இருந்தால் மொழியைப் பற்றி ஆய்வுகூட செய்யலாம்.

இதைப்போன்றே இணையப் பக்கங்களை உருவாக்கப் பயன்படும்
HTMLலையும் அடிப்படையிலிருந்து கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் நீங்கள் ஒரு நல்ல வெப்டிசைனராக(Web designer) வருவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. எனவே முதலில் இணையப் பக்கம் உருவாக்கம் செய்வதற்கு அடிப்படையாம் HTML -லை எதிர்வரும் அடிப்படைப் பாடங்களில் நம் தாய்மொழியாம் தமிழில் கற்போம்..
18 Dec 2015

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×