கணினியின் அடிப்படைக் கட்டமைப்பு (BASIC STRUCTURE OF COMPUTER)

computer structure tamil (1)

எந்தவொரு கணினியும் மேல் உள்ள படம் காட்டுவதனைப்போல், முக்கியமான மூன்று அடிப்படைக் கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கும்.

computer structure tamil (2)


CPU இன் பிரதான தொழிற்பாடுகள்

நடைபெறவேண்டிய தொடர்ச்சியான தொழிற்பாடுகளை, நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் அடிப்படையில் கட்டுப்படுத்துகின்றது.
உள்ளீட்டுத்தொகுதியினால் அனுப்பப்படும் தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் அதனுடைய பிரதான நினைவகத்தில் (ஆயin ஆநஅழசல இல்) சேமிக்கின்றது.
கணினியின் சகல பகுதிகளுக்குமான கட்டளைகளை வழங்குகின்றது.
தரவுகள் செயன்முறைப்படுத்தப்பட்டுவரும் விளைவுகளை வெளியீட்டுத் தொகுதியிற்கு அனுப்புகின்றது.



கட்டுப்பாட்டுத்தொகுதி (CONTROL UNIT)

இது கணினியில் மிக முக்கியமான பகுதியாகும். இது கணினியின் ஏனைய பாகங்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற செற்பாடுகளை மேற்கொள்கின்றது.


கட்டுப்பாட்டுத் தொகுதியினால் நிறைவேற்றப்படும் செயற்பாடுகள்

உள்ளீட்டு சாதனங்களிலிருந்துவரும் தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் ஏற்றுக்கொள்கின்றது. பின்னர் அவற்றினை நினைவகத்தில் சேமித்து தேவை யானபோது எடுப்பதற்கான கட்டளையைப் பிறப்பிக்கிறது.
கொடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் அறிவுறுத்தல்களுக்கான கட்டளை களைக் கணினியின் ஏனைய பகுதிகளுக்கு அனுப்புகின்றது.
கணித மற்றும் தர்க்கரீதியான செயற்பாடுகளுக்குரிய கட்டளைகளை வழங்கு கின்றது.
மற்றைய எல்லாப் பகுதிகளுக்குரிய கட்டளைகளை அனுப்புவதன்மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தி, ஒருங்கிணைக்கின்றது.



எண்கணித மற்றும் தர்க்கரீதியான தொகுதி (ARITHMETIC AND LOGIC UNIT)

இது பிரதானமாக இரண்டு தொழிற்பாடுகளை மேற்கொள்கின்றது.
  1. கணிதச் செயற்பாடுகளைச் செய்வதுடன் அதன் பெறுபேறுகளை நினைவகத்திற்கு அனுப்புகின்றது.
  2. தர்க்கரீதியான தொழிற்பாடுகளைச் செய்கின்றது

Advertisement

1 Blogger-facebook:

 
Top
Don't Forget To Join US Our Community
×