April 27, 2025 03:16:17 AM Menu

தற்காலத்தில் போட்டோ எடுப்பது என்பது ஒரு சர்வ சாதாரணமான காரியமாகிவிட்டது. காரணம் வளர்ந்து வரும் தொழில்நுட்பம். கையில் ஒரு சிறிய phone மட்டும் இருந்தால் மட்டும் போதும். இஷ்டத்திற்கு Photos எடுத்து தள்ளிவிடுவோம்.
அதுபோன்று நீங்கள் உங்கள் வீட்டு விஷேசத்திற்கோ, அல்லது வேறு வெளியிடங்களுக்கு சுற்றுலாச் செல்லும்பொழுது இருக்கட்டுமே என Click செய்த Photos உங்களிடம் நிறைய இருக்கும்.

அவற்றையெல்லாம் ஏனோ தானோவென்று எடுத்து வைத்திருப்பீர்கள். கடைசியில் பார்க்கும்பொழுது " அடடா.. இவ்வளவு நல்லா வந்திருக்கே.. இந்த போட்டோவை இன்னும் கொஞ்சம் Touch Up செய்தால் நல்லா இருக்குமே.." என்ற எண்ணம் உங்களுக்கு வந்துபோகும்.

இவ்வாறான சூழ்நிலைகளில் உங்களுக்கு உதவுபவைதான் Photo Editing Software அந்த மென்பொருளைப் பற்றி அறிவு எதுவும் இல்லாமல் இருந்தால் கூட நீங்கள் ஒரு சில கிளிக்குகளில் உங்கள் போட்டோவை மெருகூட்ட முடியும் என்றால் அதிக மகிழ்ச்சி அடைவீர்கள்தானே..!

அதுபோன்றதொரு அருமையான மென்பொருள்தான் FotoMix என்ற போட்டோ எடிட்டிங் மென்பொருள். நீங்கள் உங்கள் போட்டோக்களை இந்த மென்பொருள் மூலம் மெருகூட்டி அழகாக்கிக்கொள்ள முடியும்.

மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய: http://www.diphso.no/FotoMix.html என்ற இந்த வலைப்பக்க முகவரியைச் சொடுக்குங்கள்.

குறைந்த அளவே கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். மென்பொருளை தரவிறக்கம் செய்வதும், அதை நிறுவுவதும் (இன்ஸ்டால்) மிக எளிமையான வழி முறைகளே.. ஒரு சில கிளிக்குகளில் அனைத்தும் முடிந்துவிடும்.

போட்டோ மிக்ஸ் மென்பொருள் மூலம் என்னென்ன செய்யலாம்?
  • உங்கள் போட்டோகளின் பேக்ரவுண்ட் மாற்றிக்கொள்ள முடியும்.
  •  அந்த போட்டோக்களை வேறொரு போட்டவை இணைக்க முடியும்.
  • ஏற்கனவே உள்ள ஒரு பகுதியை நீக்க முடியும்.பல்வேறு போட்டோக்களை இணைத்து அதை ஓவியம் போல மாற்றலாம். இவ்வாறு செய்யும் செயல்பாட்டை கொலாஜ் என்பார்கள்.
  • அது மட்டுமில்லீங்க.. வால்பேப்பர், சி.டி. கவர், டிவிடி கவர்.. இப்படி உங்களுக்கு விருப்பமான கவர்களை நீங்களே டிசைன் பண்ணலாம்.
  • இந்த மென்பொருளின் முக்கிய அம்சமே.. நீங்கள் செய்த எல்லா போட்டோ வேலைப்பாடுகளும் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை என்று சொல்ல முடியாத அளவிற்கு மிகவும் நேர்த்தியாக, அழகாக காட்சியளிக்கும்.
போட்டோ வேலைப்பாடுகள் அனைத்தையும் முடித்துவிட்டு அதை பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.. இ-மெயில் செய்யலாம். விண்டோஸ் இயங்குககளில் இயங்க கூடியதால் அனைவருமே இதை பயன்படுத்துவது எளிது.
அருமையான இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்களேன்.. நீங்களும் ஒரு போட்டோஷாப் டிசைனர் ஆகலாம்..!!!
மென்பொருளை நேரடியாக தரவிறக்கம் மேற்கொள்ள இந்த இணைப்பில் சொடுக்கவும்.
02 Apr 2014

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×