ஏன் தெரியுமா???
ஒரு கோடைகால மாலை நேரத்தில்
மழை வந்ததும் நான் ரசித்தேன்...நீயோ நனைந்தாய்!!
செல்ல கோபங்களால் உன்னை பிடிக்கவில்லை..
நான் போகிறேன் என்பேன்...
உன்னை பிடிக்கும் அதனால்
நானும் போகிறேன் என்பாய்....
எனக்கு பட்டாம்பூச்சி பிடிக்க பிடிக்கும் என்றேன்...
எனக்கு பட்டாம்பூச்சி பிடிப்பவளை பிடிக்கும் என்றாய்!!!
விளையாட்டாய் சண்டையிடும் நேரங்களில்
நானோ சண்டையை ரசிப்பேன்...
நீயோ என்னை ரசிப்பாய்!!!
எப்பொழுதும் எதையாவது என்னிடம் மறைக்கிறாயே ???
ஏன் என்றேன்...நீ முறைப்பதை ரசிக்க தான் என்பாய்!!!!
உன்னிடம் சொல்லாமலே பிரிந்து சென்றேன்....
ஏன் என்று கேட்காமலே நீ புரிந்து கொண்டாய்..
அப்பொழுது தான் உன்னை மிகவும் பிடித்தது!!!!!
0 Blogger-facebook:
Post a Comment