April 26, 2025 11:46:47 AM Menu

Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா ப?மாற்றத் தில் அதிகபட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேற்றா பயணிக்கும் வேகம் அல்ல.

Firewall: நெட்வேர்க்கில் (இன்ரர் நெட் உட்பட) இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கொம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியை தடுக்கும் ஒரு சொப்ட்வெயர் அல்லது சிறிய ஹார்ட்வெயர் சாதனம்.

Internet Telephony: வழக்கமான டெலிபோன் இணைப்பில்லாமல் இன்ரர் நெற் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்

Peer to Peer: கொம்ப்யூட்டர்களை ஒன்றுக்கொன்று நேரடியாக எந்த சேர்வரின் துணையின்றி இணைக்கும் முறைக்கான பெயர்.

Port: ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிற் கெனத் தனியாக ஒதுக்கப்பட்டு, டேற்றா பரிமாறுவதற்கென உள்ள வழி.

Trojan: கெடுதல் விளைவிக்கும் ஒரு புரோகிராம். இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்ற வகையில் இது ஒரு நல்ல புரோகிராம் போல் காட்சி அளிக்கும். உதாரணமாக, ஒரு கேம்ஸ் புரோகிராம் போல் காட்சியளிக்கும். அல்லது கடவுள் பெயரால் மத சம்பந்தமான புரோகிராம் போலத் தோன்றமளிக்கும்.

அடிப்படையில் உங்கள் கொம்ப்யூட்டரில் சென்றவுடன் உங்கள் பெர்சனல் தகவல்களை, பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண் போன்றவற்றை திருடி, இந்த புரோகிராமில் செய்த முகவரிக்கு கொம்ப்யூட்டரை இயக்குபவருக்கு தெரியாமல் அனுப்பி வைக்கும்.

LCD: Liquid Crystal Display: குறைந்த மின்சக்தியை பயன்படுத்தி, சிறிய தட்டையான டிஸ்பிளே பேனல்கள் மூலமாக படம் காட்டும் நவீன சாதனம். டிஜிற்றல் வாட்ச் முதல் கொம்ப்யூட்டர் மொனிற்றர் மற்றும் ரி.வி.க்களில் பயன்படுத்தப் படுகிறது.

TFT: Thin Film Transistor: மிகவும் குறைந்தளவில் தடிமன் கொண்டு தட்டையான வடி வில் இயங்கும் ஸ்கிரின் தரும் தொழில் நுட்பமாகும். கொம்ப்யூட்டர் மானிற்றர் மற்றும் டிஜிற்றல் கமராக்களில் அதிகம் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மொபைல் போன்களில் இது அதிகம் பயன்பாட்டில் உள்ளது. இது மிகவும் உயர்ந்த திறன் கொண்ட தாகும். பல லட்சக்கணக்கான கலர்களை காட்டும் திறன் கொண்டது.
18 Aug 2014

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×