ஜடப்பொருளாய் இருந்த PC நான்
உயிர் கொடுத்த OS நீ
வன்பொருளாய் திரிந்த என்னை
மென்பொருளாய் திருத்தியவள் நீ
Empty CD யாக இருந்த என்னை
சங்கீத பேச்சினால் mp3 ஆக்கியவள் நீ
உயிர் கொடுத்த OS நீ
வன்பொருளாய் திரிந்த என்னை
மென்பொருளாய் திருத்தியவள் நீ
Empty CD யாக இருந்த என்னை
சங்கீத பேச்சினால் mp3 ஆக்கியவள் நீ
கணினி இயக்கும் உன் உள்ளங்கைக்குள்
கண்ணியமாய் சிறைப்படும் mouse நான்
நீ இழுக்கும் திசைக்கு வரும்
ஜாய்ஸ்டிக் அடிமை நான்
நீ மடி கொடுப்பாய் என்றால்
உன் Laptop நான்
Type அடிக்கத் தெரியாத உன் பிஞ்சு விரல்களால்
செல்லக் குட்டுகள் போடும் Keyboard நான்
உன் ஸ்பரிசம் எனை அழுத்தும் என்றால்
கணினியின் ON switch நான்
நீ உற்று ரசிப்பாய் என்று தெரிந்திருந்தால்
ஒரு Moniter ஆயேனும் நான் பிறந்திருப்பேன்
Shutdown ஆகப் போனவன் உனைப்
பார்த்த கணத்தில் Reboot ஆகிப் போனேனே
கண்ணே! நீ சூடுவாய் என்றால்
நான் தான் உனக்கு வலைப்பூ
முப்போதும் என் மனத்திரையில் ஓடும்
Youtube வீடியோ நீ
அரட்டை பெட்டியில் வரும் Smily நீ
அனுதினமும் நான் தேடும் Google நீ
என் Hardisk நிரப்பிய ஒரே கவிதை நீ
என் அறிவுக்கண்ணை திறந்த விக்கிபீடியா நீ
என் சொப்பனங்களை ஆக்கிரமித்த ஸ்க்ரீன் சேவர் நீ
இருபத்து நான்கு மணி நேரமும் என்னுள் ஓடும் சேவர் நீ
என் உள்ளத்தை அச்சடித்த கலர் பிரின்டர் நீ
வைரஸ் தாக்கும் வரை தாமதிக்காதே
விரைந்து வா! நீயும் நானும்
இந்த இணையத்தால் இணைவோம்.
0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.