பொருத்தவரை பயனாளர்கள் அதிக நேரம் தனது தளத்தில் தக்கவைக்கும்போதே விளம்பர வருவாயை பெற முடியும். அதனால் அதிக நேரம் பயனாளர்களை தன் தளத்திலேயே தக்கவைத்துகொள்ள பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக இப்பொழுது, பயனாளர்கள் தங்கள் timelines மற்றும் செய்தி பிரிவுகளில் இருந்தபடியே பாடல், இசை அல்லது எதேனும் ஒரு ஒலி களை கேட்கும் வாய்ப்பினை அளிக்க உள்ளது.
இதற்காக பெர்லினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். ஒலிச் சேவை நிறுவனமான SoundCloud உடன் இணைந்து செயல்பட உள்ளது. SoundCloud ஆடியோவுக்காண யூ டியூப் என்று கூட சொல்லலாம்.
இந்த சேவைக்கு Audio Card என்று பெயரிட்டுள்ளனர். மேலும் தற்பொழுது SoundCloud இணைந்து துவங்கினாலும், வரும் காலத்தில் மேலும் பல நிறுவனங்களை தன்னுடன் இது இணைத்து கொள்ளும் எனத் தெரிகிறது.
அதே போல இந்த Audio Card சேவையில் இசை கலைஞர்கள் தங்கள் சிறந்த படைப்புகளை மக்களிடம் எடுத்து செல்ல உதவுகிறது. இது இசை கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் மிக சிறந்த வாய்ப்பாகும்.
ஆப்பிளின் iTunes ஆதிகத்திலேயே இந்தத் துறை இருக்கிறது. இப்பொழுது SoundCloud உடன் இணைந்து டிவிட்டர் இந்த துறையில் இறங்குகிறது. டிவிட்டர் நல்ல வாய்ப்பாக அதற்க்கு வேகமாக செய்தி பரப்பக் கூடிய கோடிக்கணக்கான பயனர்கள் இருப்பதே ஆகும்.
0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.