April 24, 2025 07:16:52 AM Menu


வைய விரி வலை (World Wide Web) என அழைக்கப்படும் இன்டர்நெட் வழிமுறை முதன் முதலாக ஆகஸ்ட் 6, 1991ல் இயக்கத்திற்கு வந்தது.
22 ஆண்டுகளை இனிதே கடந்து, பல நவீன முன்னேற்றங்களைக் கண்டு, உலகெங்கும் மனிதர்களை இணைக்க பாலத்தினைத் தந்து கொண்டிருக்கிறது. இணையம் என்ற இன்டர்நெட் இதற்கும் முந்தையதாகும். தகவல்களைத் தாங்கிப் பரிமாறிக் கொள்ளும் சர்வர்களின் கட்டமைப்பும் மற்றும் அவற்றின் வழிகளும் இன்டர்நெட் Internet - என அழைக்கப்படுகின்றன. இதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வடிவமைக்கப்பட்ட ஒரு வழிமுறை (Protocol) தான் வைய விரி வலை.

இதனை உருவாக்கியவர் டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்பவர். டாகுமெண்ட்களை ஒன்றுடன் ஒன்றினை இணைக்கும் ஹைப்பர் லிங்க் எனப்படும் சிஸ்டத்தை உருவாக்கி, அதனை ஒரு பிரவுசர் வழியாகக் காணும் வழிமுறையை இவர் உருவாக்கித் தந்தார். ஏற்கனவே வேறு வழிமுறைகளில் இயங்கிக் கொண்டிருந்த இணையத்தினை அதனுடன் வெற்றிகரமாக இணைத்து செயல்படுத்தினார். இதன் மூலம் மக்கள் எளிதாகவும், வெற்றிகரமாகவும் டாகுமெண்ட் மற்றும் படங்களை உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இப்போது பெரும் வழக்கில் பயன்படுத்தப்படும் எச்.டி.டி.பி. மற்றும் எச்.டி.எம்.எல். (HTTP-: Hypertext Transfer Protocol, HTML : -Hypertext Markup Language) வழங்கு முறை தொழில் நுட்பங்கள் இதில் உருவானவையே.
03 Sep 2014

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×