April 16, 2025 02:56:10 AM Menu

இப்பதிவில் ஒரு HTML ஆவணத்தின் முழு கட்டமைப்பு எப்படி இருக்கும்
என்பதைப் பார்க்க இருக்கிறோம். ஒவ்வொரு HTML ஆவணமும் என்னும் குறி ஒட்டுடன் தொடங்க வேண்டும். இந்தக் குறி ஒட்டு, இதன் பின்னர் வருவது HTML ஆவணம் என்பதை தெரிவிக்கிறது. ஒரு HTML ஆவணம் இரண்டு பகுதிகளைக் கொண்டது.

1. தலைப்பகுதி (Head Section)
 2. உடல் பகுதி (Body Section)

1. Head section - தலைப்பகுதி

தலைப்பகுதி ஆவணத்தின் தலைப்பைப் குறிப்பதற்குப் பயன்படுகிறது இது
என்னும் குறி ஒட்டுடன் தொடங்குகிறது. இதில் என்னும் முடிவுக் குறி
ஒட்டுடன் முடிவடைகிறது. தலைப்பகுதியை முடிக்க முடிவுக்
குறிஒட்டைப்(Tag) பயன்படுத்த வேண்டும்.

2. உடல் பகுதி (Body Section)

உடல் பகுதியில் என்னும் குறி ஒட்டைத் தொடர்ந்து ஆவணத்தின் உரைப்
பகுதி இருக்கும். இது என்னும் முடிவுக் குறிஒட்டுடன் முடிவடைகிறது.
ஆவணத்தின் உடல் பகுதி பல HTML குறி ஒட்டுக்களைக் கொண்டிருக்கும். சில
குறி ஒட்டுகள் உரையின் வரிகளை வடிவூட்டல் செய்வதற்கு
பயன்படுத்தப்படுகின்றன. சில குறிஒட்டுகள்(Tags)படங்கள், அட்டவணைகள்,
மற்றும் படிவங்களைச் சேர்ப்பதற்கும், இணைப்புகளை உருவாக்குவதற்கும்
பயன்படுகின்றன.

ஆவணத்தின் இறுதியிலுள்ள என்னும் முடிவுக் குறி ஒட்டு HTML ஆவணம் முடிவடைகிறது என்பதைக் குறிக்கிறது.

ஒரு HTML ஆவணத்தின் அடிப்படை கட்டமைப்பு கீழ்க்கண்டவாறு இருக்கும்.

<HTML>

<HEAD>
<TITLE>....</TITLE>
</HEAD>
<BODY>
</BODY>
</HTML>


இந்த HTML ஆவணத்தை இரண்டு பகுதிகளாப் பிரிக்கலாம். ஒன்று Header
Section, இரண்டு Body Section.. இவற்றிற்கான விளக்கங்கள் மேலே குறிப்பிட்டுள்ளேன்.




இனி HTML ல் உள்ள ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றியும், அதன்
முக்கியத்துவங்களைப் பற்றியும், அது எதற்காக பயன்படுத்தப்படுகிறது
என்பதைப் பற்றியும் காண்போம்.
21 Dec 2015

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×