HTML -ல் முக்கியமானது பண்புகள்(Attributes). இந்த பண்புகள்தான் மிக
முக்கியப் பணிகளில் ஒன்றான வலைப்பக்கத்தை அழகூட்ட,
எழுத்துருக்களை(வெவ்வெறு எழுத்துருக்களாக) மாற்றி காண்பிக்க,
வண்ணங்களை மாற்ற பலவகைகளில் பயன்படப்போகிறது. இந்த
பண்புகளைப்(Attributes) பற்றி இப்பதிவின் ஊடாக காண்போம்.
சாதாரணமாக பண்புகள் என்றால் என்ன? என்பதைப் பற்றி நமக்குத் தெரியும்.
ஒவ்வொரு பொருளுக்கும் பண்புகள் என்பது உண்டு. அதாவது சக்கரை
இனிக்கும். இங்கு இனிப்பு சர்க்கரையின் பண்பு..
அதுபோன்றே குறிஒட்டுகளின் (Tags) தன்மைகள் விளக்கிக்கூற இந்த
பண்புகளைப் பயன்படுத்தலாம்.
HTML குறிஒட்டுகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளை சேர்க்க முடியும்.
ஒரு குறிஒட்டில்(டேகில்) பண்புகளைச் சேர்ப்பதன் மூலம் அக்குறிஒட்டு
எவ்வாறு தெரிய வேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்பதற்கான
கூடுதல் தகவல்களை உலவிக்குத் தெரிவிக்க முடியும். பண்புகளின் பெயர்
மற்றும் அதன் மதிப்பை சமக்குறியீட்டுடன் (=) கொடுக்க வேண்டும். அதாவது
இவ்வாறு இருக்க வேண்டும்.
<BODY BGCOLOR="green">
இதில் BODY என்னும் குறிஒட்டு(TAG) BGCOLOR எனும் பண்புடனும், green எனும் மதிப்புடனும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனுடைய பொதுவான வடிவம்(syntax) இவ்வாறு இருக்கும்.
<tag_name attribute 1="value" attribute 2="value"...>

0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.