இணைய தளங்களில், படிவம் ஏதேனும் ஒன்றை நிரப்பி முடித்த பின்னர், கப்சா ரெக்ஸ்ட் (CAPTCHA Text) ஒன்றை மேற்கொள்ளும்படி கேட்கும். இதில் சாய்வான எழுத்துக்கள், எண்கள் தரப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில்,
இது சரியாகத் தெரிவதே இல்லை. இதனை ஏன் கப்சா ரெக்ஸ்ட் என்று சொல்கிறார்கள். இதன் விரிவாக்கம் என்ன?

இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்களுக்கு இந்த கேள்வி ஒரு சந்தேகமாக இருந்திருக்கும். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இதோ அது பற்றிய பதில் குறிப்பு. கப்சா ரெக்ஸ்ட் என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart ஆகும். இணையத் தொடர்பில், பின்னூட்டங்களைப் பெறுகையில், கம்ப்யூட்டருக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாட்டினைக் காண இந்த சோதனை நடத்தப்படுகிறது.


ஏனென்றால், ஆன்லைனில், கம்ப்யூட்டரே சில கேள்விகளுக்குப் பதில் அளித்து, பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றை வழங்கும் வகையில் புரோகிராம் அமைக்க முடியும் என்பதால், மனிதர்கள் மட்டுமே பதில்களைத் தரும் வகையில் இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண்கள், பல கோணங்களில் சரியான உருவமற்று இருப்பது போல இவை அமைக்கப்பட்டு காட்டப்பட்டு, அவற்றை உள்ளீடு செய்திடுமாறு செய்வதே கப்சா ரெக்ஸ்ட் சோதனை.

இதனை ஒரு கம்ப்யூட்டர் படிக்க முடியாமல் செய்திட எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அமைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உங்களுக்குக் காட்டப்படும் கப்சா ரெக்ஸ்ட் சோதனைக்கான எழுத்துக்கள் அல்லது எண்களைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், அருகில் வட்டவடிவ அம்புக் குறியாகக் காட்டப்படும் ஐகானை அழுத்தவும். புதிய எழுத்துகள் அடங்கிய கப்சா ரெக்ஸ்ட் சோதனை தரப்படும்.
17 Oct 2014

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×